இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது!

0
இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார்.
அர்ஜுனா விருது:

இந்திய விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அர்ஜுனா கேல் ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு விருது பெரும் வீரர்களின் பட்டியல் 2023 டிசம்பர் மாதம் வெளியானது. இவர்களுக்கான விருதினை வழங்கும் விழா இன்று தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையில் நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வாகியுள்ள வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் ஷமியின் ஆட்டம் பல்வேறு பாராட்டுகளை பெற்றது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அர்ஜுனா விருதுக்கு ஷமியை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!