திருப்பூரில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருப்பூரில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருப்பூரில் உள்ள உடுமலையை அடுத்து இருக்கும் இந்திரா நகர், அலகுமலை ஆகிய பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. அத்துடன் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் மின் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு மின் விபத்துகள் ஏராளமான இடங்களில் ஏற்படுகிறது. இதனை முறையாக மாதந்தோறும் சரி செய்ய மின் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது. இவ்வாறு மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடையை மாதந்தோறும் மின்வாரியம் அறிவிக்கிறது. இந்த மின்தடையை முறையாக தேதி, நேரம் குறித்து அறிவித்தபின் அரசு செயல்படுத்தி வருகிறது.

TNPSC புதிய காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்தா? தேர்வர்கள் கவனத்திற்கு!

அதனை தொடர்ந்து நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான உடுமலை மின் நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, இராமேகவுண்டன்புதூர், மெட்ராத்தி ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடுவதால் நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

கே.வி.எஸ். பள்ளியில் தேர்வில்லாத ஆசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.27,500/-

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான அலகுமலை, பெருந்தொழுவு, சாணார்பாளையம், முதலிபாளையம், விஜயாபுரம், நல்லூர், கரட்டுப்பாளையம், சுப்பேகவுண்டம்பாளையம், குளத்துப்பாளையம், ஆலாம்பாளையம், கண்டியன்கோவில், பூசாரிபாளையம், மருதுறையான்வலசு, மீனாட்சிவலசு, கவுண்டம்பாளையம், அமராவதிபாளையம்.கரட்டுப்புதூர், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், மணியாம்பாளையம், நாச்சிபாளையம், கந்தாம்பாளையம், கைகாட்டிபுதூர், வலுப்பூரம்மன் கோவில், பொல்லிக்காளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

கோவில்வழி, புதுரோடு, ஆர்.ஜி., பாளையம், பருவகாரப்பாளையம், குமாரபாளையம், ஜஸ்வரியா கார்டன், சத்யாகாலனி, வண்ணாந்துறைபுதூர் மற்றும் அம்மாபாளையம், கணபதிபாளையம், தாயம்பாளையம், வேலம்பட்டி, முத்துநகர், ராமகிருஷ்ணா ஆசிரமம் பிரிவு, குப்புச்சிபாளையம், எம்.ஜி.ஆர்.. நகர், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், திருநகர் மற்றும் யாசின்பாபு நகர் பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here