என்னது.. இன்னும் நீங்க 5G-க்கு மாறலயா – அப்போ உங்க மொபைலில் இந்த செட்டிங்கை உடனே மாத்துங்க!

1
என்னது.. இன்னும் நீங்க 5G-க்கு மாறலயா - அப்போ உங்க மொபைலில் இந்த செட்டிங்கை உடனே மாத்துங்க!
என்னது.. இன்னும் நீங்க 5G-க்கு மாறலயா - அப்போ உங்க மொபைலில் இந்த செட்டிங்கை உடனே மாத்துங்க!
என்னது.. இன்னும் நீங்க 5G-க்கு மாறலயா – அப்போ உங்க மொபைலில் இந்த செட்டிங்கை உடனே மாத்துங்க!

இந்தியாவில் கடந்த வாரம் பாரத பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளருக்கு 5ஜி சேவைகளை வழங்க தொடங்கியுள்ளன. இந்த 5ஜி சேவையை உங்களின் மொபைல் போனில் பெறுவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

5G நெட்வொர்க்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை முதற்கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி உள்ளிட்ட 8 பெருநகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தற்போது 5ஜி சேவையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். நீங்கள் 5ஜி சேவையை பெற விரும்பினால் முதலில் நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் உங்கள் பகுதியில் 5ஜி பெறுவதற்கான டவர் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் இந்த அதிவேக இன்டர்நெட் சேவையை பெற முடியும். மேலும் நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பதுடன் 5ஜி சிம் கார்டையும் வைத்திருக்க வேண்டும். உங்களின் 5ஜி மொபைலில் 5ஜி சேவையை எப்படி பெறலாம் என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

1. இதற்கு முதலில் உங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள “Settings” பகுதிக்குள் செல்ல வேண்டும்.

2. இப்போது Connection அல்லது Mobile Network என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதில் இப்போது Network Mode என்பதை டைப் செய்து இதில் உங்களுக்கு தேவையான 5ஜி என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. இப்போது உங்களின் ஸ்மார்ட்போனின் திரையின் வலது புறத்தின் மேல் 5ஜி நெட்வொர்க் காண்பிக்கப்படும்.

5. பிறகு நீங்கள் இந்த அதிவேக 5ஜி சேவையை உங்கள் மொபைலில் பயன்படுத்தலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நாங்கள் எந்த ஆணியையும் பிடுங்குவதாக இல்லை. தற்போது 4G போதும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!