கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு தகுதியற்றவர்களா? மகளிர் ஆணையத்தின் நோட்டீஸ்!

0
கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு தகுதியற்றவர்களா? மகளிர் ஆணையத்தின் நோட்டீஸ்!
கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு தகுதியற்றவர்களா? மகளிர் ஆணையத்தின் நோட்டீஸ்!
கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு தகுதியற்றவர்களா? மகளிர் ஆணையத்தின் நோட்டீஸ்!

இந்தியாவில் மூன்று மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணி பெண்கள் வங்கி பணியில் சேர ‘தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

ஆட்சேர்ப்பு விதி:

இந்தியாவில் மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது அவர்களுக்கு பேறுகால விடுமுறை அரசு சார்பாக அளிக்கப்படுகிறது. அதன் படி இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு மகப்பேறு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகப்பேறு கால சலுகைகளை பெறுவதற்கு, வேலை செய்யும் நிறுவனத்தில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 80 வேலை நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டியது அவசியம்.

Exams Daily Mobile App Download

கர்ப்ப காலத்தில் பெண்கள் பணியிலிருந்து நீக்குவதை அல்லது வெளியேற்றப்படுவதை மகப்பேறு சட்டம் தடுக்கிறது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கியின் புதிய ஆட்சேர்ப்பு விதியின் படி மூன்று மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் வங்கி பணியில் சேர ‘தற்காலிகமாக தகுதியற்றவர்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ ரீதியாக வேலைக்குத் தகுதியற்றவர்கள். வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு வங்கியில் நியமனம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யப்படுவார்கள்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் EPFO வட்டி விகிதத்தில் உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு !

இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வங்கியின் இந்த ஆள்சேர்ப்பு விதிகளுக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் ஒரு பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தால், அவர் ‘தற்காலிகமாக தகுதியற்றவர்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பணியில் சேர்வது பாதிக்கப்படும். மேலும் பணியாளர் சீனியாரிட்டியை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020-ன் கீழ் உள்ள மகப்பேறு நன்மைகளுக்கு முரணாக தற்போதைய அறிவிப்பு உள்ளது. இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!