விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மகளுக்கு ‘டெங்கு’ – அவரே வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

0
விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மகளுக்கு 'டெங்கு' - அவரே வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மகளுக்கு 'டெங்கு' - அவரே வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மகளுக்கு ‘டெங்கு’ – அவரே வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

விஜய் டிவியின் புகழ் பெற்ற பல நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பரிட்சயமானவர் அறந்தாங்கி நிஷா. இவரது மகள் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அது தொடர்பான விழிப்புணர்வையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா:

தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிமுகம் ஆனவர் அறந்தாங்கி நிஷா. மிகவும் எதார்த்தமான காமெடிகளால் இவர் மக்கள் மனதில் பதிந்தவர். தன்னை தானே தாழ்த்திக் கொண்டு அதன் மூலம் பெரிய உயரத்தை அடைந்தவர். இந்த போட்டியின் இறுதி வரை போராடி வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் வரும் காமெடி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிஷா கண்டிப்பாக இருக்க ஆரம்பித்தார். தனது கணவர் ரியாஸ் உடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கவே அழுதுள்ள தனம் சுஜிதா – வெளியான வீடியோவில் ஓபன் டாக்!

இதனால் நிஷாவின் குடும்பம் மொத்தமும் பிரபலமடைந்தது. அதன் பிறகு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் புதிய முயற்சியை எடுத்தார். தனது கலகலப்பான பேசினால் அதிலும் வெற்றியை அடைந்தவர், தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நடிகை என்னும் புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார். நடிகையாகவும் இவர் புதிய உயரத்தை அடைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிஷாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதலில் ஒரு பையன், அடுத்ததாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

‘பிக் பாஸ்’ சென்ற நடிகர் சஞ்சீவுக்காக தளபதி விஜய் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!

தனது கைக்குழந்தையை விட்டு விட்டு தான் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது மகள் சபாவிற்கு தற்போது டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதிகம் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருவதாகவும், இதனால் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றி கொசு வளராமல் கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். தற்போது டெங்கு அதிகம் பரவுவதால், எந்த காய்ச்சலாக இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் இதில் பயப்பட ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தை விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!