‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கவே அழுதுள்ள தனம் சுஜிதா – வெளியான வீடியோவில் ஓபன் டாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடிக்க மறுத்த தனம் சுஜிதா - ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடிக்க மறுத்த தனம் சுஜிதா - ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கவே அழுதுள்ள தனம் சுஜிதா – வெளியான வீடியோவில் ஓபன் டாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தற்போது தனது யூடியூப் சேனலில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டும் தான். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் எதார்த்தமான பிரச்சனைகள் மற்றும் சந்தோசங்களை அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் குடும்பத்தினர் அனைவரும் மன்னித்து ஏற்றுக் கொள்கின்றனர். இதனால் கதைக்களம் பழையபடியே சூடுபிடித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, புதிதாக மருமகளாக வந்திருக்கும் ஐஸ்வர்யா நன்றாக சமைத்து வீட்டில் இருக்கும் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கி விடுகிறார்.

‘பிக் பாஸ்’ சென்ற நடிகர் சஞ்சீவுக்காக தளபதி விஜய் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் மீனாவிற்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. அது மட்டுமின்றி தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் கயல் பாப்பாவை விடுத்து அனைவரும் பாண்டியனை தான் கொஞ்சுகின்றனர் என்றும் மீனா நினைக்கிறார். இதனால் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. மீனாவின் இந்த மாற்றம் குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இந்த சீரியல் பல வித ட்விஸ்டுகளுடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை சுஜிதா. அவர் தனது யூடியூப் சேனலில் புதிதாக ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். அதில் ஒவ்வொரு எபிஸோடிலும் தான் எவ்வாறு தனம் கதாபாத்திரத்திற்கு தயாராகுகிறேன் என்பது பற்றி பதிவிட்டுள்ளார்.

Vijay TV Bigg Boss 5 Promo | நிரூப்பிற்கு பின் விளைவுகள் கடுமையாக இருக்கும், எச்சரித்த கமல்!

அதில் தான் உபயோகிக்கும் மேக் அப் பொருட்கள், காஸ்டியூம் என்று பலவற்றையும் பற்றி அவர் பேசி உள்ளார். குறிப்பாக, அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முதலில் மறுப்பு தெரிவித்து அழுதாராம். பின்னர் தான் இந்த சீரியலில் நடிக்க துவங்கியதும், அவருக்கு அங்குள்ளவர்கள் செட் ஆகி உள்ளனர். தற்போது இந்த சீரியல் தனக்கு நல்ல பெயரை மட்டுமல்லாது புகழையும் பெற்று கொடுத்துள்ளது என்று அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.”

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!