தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு - இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு - இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக சட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு 5 ஆண்டு சட்டம் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. இதற்கான விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம்:

12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கி உள்ளது. தற்போது 12ம் வகுப்பு முடித்து நேரடியாக 5 ஆண்டு சட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tokyo Olympics Boxing 2020 – வெண்கல பதக்கம் வென்றார் லவ்லினா! அரையிறுதியில் தோல்வி!

சென்னையில் உள்ள சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும், சீர்மிகு சட்ட கல்லூரியில் பி.ஏ., பி.பி.ஏ, பி.காம் மற்றும் பி.சி.ஏ, படிப்புடன் இணைந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி.,யும் அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சரஸ்வதி சட்டக் கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி, படிப்பு மட்டும் நடத்தப்படுகிறது என்று விண்ணப்பம் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டது. எனவே மாணவர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

சட்ட படிப்புக்கான விண்ணப்பங்களை இன்று முதல் வரும் 26ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும், மேலும் விண்ணப்பிப்பதற்கு www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது. தற்போது சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்பதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் விண்ணப்ப பணிகளை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து 3 ஆண்டுக்கான எல்.எல்.பி., பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுக்கான எல்.எல்.எம்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை பதிவு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 – 2464 1919, 2495 7414 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!