TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது குரூப் 2 தேர்வு வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்கள் மூடல் – நீதிபதியின் உத்தரவிற்கு தடை!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதில் Automobile Engineer பணியிடத்திற்கு மட்டும் 37 வயது வரை நிரம்பியவராக இருக்கலாம். இதில் Automobile Engineer, Junior Electrical Inspector, Assistant Engineer, Assistant Director of Industrial Safety and Health, General Foreman, Technical Assistant உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அந்தந்த பணியிடத்திற்கு தேவையான துறை சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு ரூ.37,700 முதல் ரூ.1,38,500 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 26ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள முகவரிக்கு சென்று மே மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இது தொடர்பான தகவல்களை பெற https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!