தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – Engineering படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - Engineering படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - Engineering படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – Engineering படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் இன்று 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்குரிய தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அத்துடன் அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்றது. இதையடுத்து தேர்வின் முடிவுகளுக்காக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் காத்திருந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாணவர்கள் உயர்கல்வியில் சேர தயார் நிலையில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த கொண்டு வந்ததால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பொறியியல் படிப்பில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு – உங்களுக்கான மாதிரி தேர்வு..!

மேலும் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இன்று முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்ப படிவத்துடன் அசல் சான்றிதழ்களை வருகிற ஜூலை 19ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். இதையடுத்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் அத்துடன் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!