TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் இத்தேர்வு எப்போது நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இத்தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அத்துடன் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 8ம் வகுப்பிறகு உட்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக அனைத்து அரசு போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டதால் 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வும் நடத்தப்படவில்லை

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் வெளியிட்டது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக கடந்த மார்ச் 7ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது.

Ultratech Cement நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்த 2 தாள்களுக்கும் சுமார் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வரை விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. அத்துடன் இத்தேர்வுக்குரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!