வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – பண பரிவர்த்தனைகளின் வரம்பு!

0
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - பண பரிவர்த்தனைகளின் வரம்பு!
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - பண பரிவர்த்தனைகளின் வரம்பு!
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – பண பரிவர்த்தனைகளின் வரம்பு!

பல வகையான சேமிப்பு கணக்குகள் இயங்கி வரும் நிலையில் சேமிப்பு கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகளின் வரம்பு குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பணப் பரிவர்த்தனை:

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு அனைவருக்கும் தேவையான ஒன்றாகியுள்ளது. அத்தகைய பணத்தேவையை தீர்க்கும் இடமாக வங்கிகள் இயங்கி வருகிறது. தினசரி, மாதாந்திர பணம் எடுப்பதற்கும், நிதி பரிவர்த்தனைகளுக்கு, பண பரிவர்த்தனைக்கும், சில உச்ச வரம்புகளை அரசு நிர்ணயித்துள்ளது. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, சம்பளம் பெறும் வங்கி கணக்கு, வைப்பு நிதி கணக்கு, நடப்பு கணக்கு என்று பலரின் தேவைகளுக்கும் ஏற்றவாறு வங்கி கணக்குகள் இயக்கத்தில் உள்ளது.

SBI வங்கியின் Debit Card இல்லாமல் ATM இல் பணம் எடுக்கலாம் – முழு விபரங்கள் இதோ!

சேமிப்பு கணக்கு என்பது தனிநபர்கள் பயன்படுத்தக் கூடிய கணக்காகும். இருப்புத் தொகை மற்றும் வங்கியைப் பொறுத்து 2.70 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. தனிநபரின் சேமிப்புக் கணக்கை பராமரிக்க தேவைப்படும் குறைந்தபட்ச தொகை, நடப்பு கணக்கை விட குறைவாகவே இருக்கும். சேமிப்பு கணக்குகளில் பணப் பரிவர்த்தனைகளின் வரம்பு குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சேமிப்பு கணக்கு:

கணக்குகளில் நிலையான வைப்புத்தொகைகள் இல்லை. இத்தகைய வழக்கமான சேமிப்புக் கணக்குகள் மிகவும் பாதுகாப்பானதாகும்.

சம்பள அடிப்படையிலான சேமிப்பு கணக்கு:

சம்பள அடிப்படையிலான சேமிப்பு கணக்குகல் நிறுவங்கள் மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக திறக்கப்படும் கணக்காகும். வங்கி, நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்று சரியான நாளில் ஊழியர்களுக்கு வழங்குகிறது. இந்த கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை. இந்த கணக்குகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், அந்தக் கணக்கு பொதுவான சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டு விடும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு:

இந்த கணக்குகளும் பொதுவான சேமிப்புக் கணக்குகளைப் போலவே செயல்படுகின்றன. இந்த கணக்குகள் மூத்த குடிமக்களுக்கு மிக அதிக வட்டி விகிதங்களையும் வங்கிச் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்த கணக்குகள் அவர்களின் ஓய்வூதிய கணக்குகள் அல்லது ஓய்வூதிய நிதிகளில் இருந்து பணத்தை அனுப்பவும் அதேபோல் அனைத்து நிதிகளையும் ஒரே வங்கிக் கணக்கின் கீழ் ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.

மைனர் சேமிப்பு கணக்கு:

18 வயதிற்கு குறைவானவர்களுக்கு திறக்கப்படும் கணக்கு மைனர் சேமிப்பு கணக்கு என கூறப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் தேவையில்லை. கணக்காளருக்கு 18 வயதாகும்போது கணக்கு இப்போது வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு:

இந்த கணக்குகளை தொடங்க குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் தேவையில்லை. ஆனால் இந்த கணக்கில் இருந்து எடுக்கக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே வங்கி இருப்புத்தொகை இருந்தாலும் அபராதம் விதிக்கப்படாது.

தமிழகத்தில் 93 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பொதுவாக கணக்காளர் காசோலை, பணம் எடுக்கும் ஸ்லிப் அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கிறீர்கள் என்றால், ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை எடுக்க முடியும். அதேபோல் ஏடிஎம் கார்டு மூலம் தினமும் ரூ.10,000 வரை எடுக்கலாம். கணக்காளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மூன்று முறை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன்பின் எடுக்கப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை வருமான வரித் துறைக்கு வங்கி தெரிவிக்க அதிகாரம் உள்ளது. அதுபோன்ற சமயங்களில் வலுவான காரணம் அல்லது சரியான ஆவணங்கள் இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!