SBI வங்கியின் Debit Card இல்லாமல் ATM இல் பணம் எடுக்கலாம் – முழு விபரங்கள் இதோ!

0
SBI வங்கியின் Debit Card இல்லாமல் ATM இல் பணம் எடுக்கலாம் - முழு விபரங்கள் இதோ!
SBI வங்கியின் Debit Card இல்லாமல் ATM இல் பணம் எடுக்கலாம் - முழு விபரங்கள் இதோ!
SBI வங்கியின் Debit Card இல்லாமல் ATM இல் பணம் எடுக்கலாம் – முழு விபரங்கள் இதோ!

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை SBI வங்கி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் வசதிக்காக Debit Card இல்லாமல் ATM – ல் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

Debit Card இல்லாமல் ATM பணம்:

இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று தான் SBI (State Bank of India) வங்கி. இந்த SBI வங்கி தனது பயனர்களுக்கு பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது Debit Card இல்லாமல் ATM – ல் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு உங்களது வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால் போதும். மேலும் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான யோனோ செயலி (YONO App) உங்களது மொபைலில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் நவ.19ம் தேதிக்கு பிறகு பள்ளிக் கல்வித்துறையில் புதிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்!

நம்மில் பலர் ATM – ல் பணம் எடுக்க செல்லும் போது Debit Card – ஐ மறந்து விட்டு பணம் எடுக்க முடியாமல் வீட்டுக்கு திரும்ப சென்றிருப்போம். இத்தகைய செயலை குறைக்கும் விதமாகவே இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது SBI வங்கி. பணம் எடுக்க செல்லும் போது Debit Card – ஐ மறந்துவிட்டால் உங்களது பதிவிறக்கம் செய்திருக்கும் யோனோ செயலியை User Id மற்றும் Password பதிவிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் யோனோ கேஷ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

தமிழகத்தில் 93 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பின்னர் அதில் உள்ள ATM ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் எவ்வளவு தொகை என்பதை உள்ளிட்ட வேண்டும். அதன் பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு 6 இலக்க PIN நம்பர் வரும். பிறகு ATM க்கு சென்று யோனோ கேஷ் ஆப்ஷனை கிளிக் செய்து அந்த 6 இலக்க PIN நம்பரை உள்ளிடுவதன் மூலம் உங்களது தொகையை பெற முடியும். இந்த PIN நம்பர் 6 மணி நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இந்த வசதி மூலம் ரூ.500 முதல் ரூ.10,000 வரை பணம் பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!