தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பேரலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வித்தொலைக்காட்சியின் பாட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பாட அட்டவணை
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் இந்த 2021-22 ஆம் கல்வியாண்டு சற்று தாமதமாக துவங்கியுள்ளது. முன்னதாக அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பாடங்கள் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் முதல் வகுப்புகள் துவங்கியது. அதன் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்தப்படும் நேரங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகை – மத்திய அரசு உறுதி!
அந்த அட்டவணையின் படி, வாரத்தின் 7 நாட்களும், அதாவது ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் என்ற வகையில் பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளது. அதாவது காலை 5.30 மணியளவில் துவங்கும் பாடங்கள், இரவு 10.30 வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தவிர இந்த பாடங்களை மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது கல்வித்தொலைக்காட்சியின் யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பாகும் பாடங்களை கற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
