8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
8ம் வகுப்பு முதல் B.E/B.Tech படித்தவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்-ஆளுமை மையத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.12.2022 மாலை 5 மணிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் System Architect, System Analyst, System Administrator, Programmer Analyst, Software Developer மற்றும் Peon cum Driver
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

System Architect, System Analyst, System Administrator, Programmer Analyst, Software Developer மற்றும் Peon cum Driver பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:

System Architect , Analyst, Administrator, Programmer Analyst, Software Developer ஆகிய பதவிக்கு என அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E/B.Tech (CSE /IT or equivalent)/ MCA or M.Sc (CSE /IT or equivalent) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Peon cum Driver பதவிக்கு என 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் / குறுஞ்செய்தி / தொலைபேசி அழைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1,16,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • System Architect – ரூ.45,000/-
  • System Analyst – ரூ.35,000/-
  • System Administrator – ரூ.35,000/-
  • Programmer Analyst – ரூ.25,000/-
  • Software Developer – ரூ.20,000/-
  • Peon cum Driver – AU விதிமுறைகளின்படி தினசரி ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.auegov.ac.in/career.html என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025” என்ற முகவரிக்கு 05.12.2022 மாலை 5.00 மணிக்கு அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!