தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் – அண்ணா பல்கலை வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 5 புதிய பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த பாடத்திட்டங்கள் அனைத்தும் இந்தாண்டு முதலே கற்பிக்கப்பட இருக்கின்றது.
புதிய பாடத்திட்டங்கள்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை முன்பே அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையிலும் விரைவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும்படியாகவும், சுயதொழில் தொடங்குவதற்கான யுக்தியை ஏற்படுத்தும் வகையிலும் பொறியியல் பாடத்திட்டங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை நடப்பு ஆண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தற்போதைக்கு பொறியியல் படிப்பில் 5 பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று செமஸ்டர்களுக்கு தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication Lab/ Foreign Lab போன்ற 5 பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!
மேலும், முதற்கட்டமாக இரண்டாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கூடிய விரைவில் புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய பாடதிட்டத்தினை மாணவர்கள் இந்தாண்டில் இருந்தே கற்க இருக்கின்றனர். மேலும், கூடிய விரைவில் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்