மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 3 % அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் அடிப்படை ஊதியம் உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சம்பள உயர்வு:

இந்தியாவில் மத்திய அரசு தங்களது ஊழியர்களுக்கு கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வை அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% அதிகரிக்கப்பட்டது. இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் உயர்ந்துள்ளது.

மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிட்மென்ட் காரணி 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 7வது ஊதியக் குழுவில் மத்திய ஊழியர்களின் சம்பளம் பிட்மெண்ட் காரணியால் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி மத்திய ஊழியர்களுக்கான பிட்மெண்ட் பேக்டர் 3.68% அதிகரித்தால் அடிப்படைச் சம்பளம் ரூ.18000-லிருந்து ரூ.26000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப அடிப்படை ஊதியத்தை உயர்த்தும் நோக்கில் தற்போது பிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போதைய தற்போதைய தகவலின் படி ஒரு வேளை பிட்மென்ட் ஃபேக்டர் உயர்த்தப்பட்டால் அடிப்படை ஊதியம் ரூ. 50,000 பெறும் ஊழியருக்கு மாதம் ரூ.95,000 வரை சம்பளம் உயர வாய்ப்புள்ளது. மேலும் ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில் பிற படிகள் தவிர்த்து அவருடைய சம்பளம் ரூ 46,260 வரை அவருக்கு லாபம் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!