11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

0
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுவையில் அரசு பள்ளியில் பயின்று வரும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் எனவும், குடும்ப பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் சட்டசபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இலவச லேப்டாப்:

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது குறித்தான சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி இந்தாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதாவது, புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், இலவச சீருடை, காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சலுகைகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுவையில் 21 வயது முதல் 57 வயது வரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், இது வரைக்கும் அரசின் எந்த உதவித்தொகையையும் பெறாத குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10, 12 ம் வகுப்பு தேர்வுகள் நாளை தொடக்கம் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மேலும், டாக்டர் அப்துல்கலாம் அரசு கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் எனவும், புதுவை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் எனவும், துணை மின் நிலையங்கள் முறையாக சீரமைக்கப்படும் எனவும், காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும் எனவும், புதுவையில் கூடுதலாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும் எனவும், காரைக்காலில் மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here