திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் – 22ம் தேதி டோக்கன் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தற்போது அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலையில் இருக்கும் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கபிரதட்சணம், இலவச தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம், கட்டண சேவைகளில் கலந்து கொள்ளவும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், தொடர் விடுமுறையின் காரணமாக கோவிலுக்கு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதாவது வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் பக்தர்கள் நிரம்பினர். அதனால் பக்தர்கள் வரிசை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டது. இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 48 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இன்று கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சபரி ஐயப்பன் கோவிலில் அடுத்த 5 நாட்களுக்கு நடை திறப்பு – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஒவ்வொரு மாதமும் அங்கப்பிரதட்சண டோக்கன்களை தேவஸ்தானம் இணையத்தில் வெளியிடும். அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தினத்தில் பக்தர்களால் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள இயலாது. ஆதலால் இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட தேதிகளை தவிர்த்து மற்ற தேதிகளில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்