சன் டிவி சீரியலில் வனிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!

0
சன் டிவி சீரியலில் வனிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை - அவரே வெளியிட்ட பதிவு!
சன் டிவி சீரியலில் வனிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை - அவரே வெளியிட்ட பதிவு!
சன் டிவி சீரியலில் வனிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!

சன் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான அன்பே வா சீரியலில் வனிதா என்ற என்ற மூத்த அரசு அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்பே வா:

80’ஸ் திரைப்படங்களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய சகோதரி ராதாவும், சிவாஜி முதல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.பல ஹிட் படங்களில் நடித்த அம்பிகா, அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அம்பிகா.

சந்தியா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, வீட்டை விட்டு அனுப்பும் சரவணன் – இன்றைய எபிசோட்!

இந்நிலையில் அவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சன் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான அன்பே வா சீரியலில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார். அந்த கதாபாத்திரம் குறித்து தனது இன்ஸ்ட்டா பதிவில் அவர் கூறித்தாவது, ‘அன்பே வா’ சீரியலில் நடித்தது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். “அன்பே வா டீம் ஒரு ஜாலியான டீம். அந்த டீமில் இணைந்தது நடித்தது சூப்பராக இருந்தது.

நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!

வனிதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடன் நடித்த எல்லோரும் சூப்பரான, திறமையான நடிகர்கள். என்னுடைய பேவரெட் நடிகர் குமார்” என தெரிவித்துள்ளார். இந்த சீரியல் ஹிட் சீரியல்களின் வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் கடந்த 2020 நவம்பர் 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இயக்குநர் சிவா, இந்த சீரியலை இயக்குகிறார். ரதி பாலா வசனமும், ராஜாஷ்ரி என் ராய் திரைக்கதையும் எழுதுகின்றனர். பல்வேறு திருப்பங்களுடன் இந்த சீரியல் செல்வதால் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!