வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை – அதிபர் அறிவிப்பு!

0
வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை - அதிபர் அறிவிப்பு!
வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை - அதிபர் அறிவிப்பு!
வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை – அதிபர் அறிவிப்பு!

ஆப்ரிக்க நாடுகளில் அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வாரந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் தங்களின் வாழ்வாதாரம் இழந்தனர். மேலும் தங்களின் வேலைகளையும் இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். உணவு மற்றும் இதர செலவுகளை சமாளிக்க முடியாமால் மக்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனா பேரிடர் அடுத்தடுத்து பாதிப்பு எண்ணிக்கைகளை அதிகப்படுத்தியதால் மக்கள் வறுமையில் இருந்து மீள முடியவில்லை. தற்போது அரசு தடுப்பூசிகள் கட்டுப்பாடு போன்றவைகளை தொடர்ந்து அமலில் வைத்துள்ளதால் ஓரளவு பாதிப்புகள் குறைந்து வருகிறது.

மாநிலத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இதனையடுத்து வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டில் உணவு, வறுமை நிலவுகிறது. இல்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகை அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி வேலை இல்லாமல் உதவும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வாரந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மேலும் வேலை இல்லாதவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக அதிபர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாதோர் படும் இன்னல்களை போக்க அந்நாட்டு அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உதவித்தொகை அறிவிப்பால் அந்நாட்டு இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here