தன் குட்டி தம்பியை ஆசையாக வரவேற்ற ஐலா – வெளியான வீடியோ! குவியும் லைக்குகள்!

0
தன் குட்டி தம்பியை ஆசையாக வரவேற்ற ஐலா - வெளியான வீடியோ! குவியும் லைக்குகள்!
தன் குட்டி தம்பியை ஆசையாக வரவேற்ற ஐலா - வெளியான வீடியோ! குவியும் லைக்குகள்!
தன் குட்டி தம்பியை ஆசையாக வரவேற்ற ஐலா – வெளியான வீடியோ! குவியும் லைக்குகள்!

சின்னத்திரையின் ஆஸ்தான ஜோடியான சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் சமூக வலைத்தளங்களை கலக்கி வரும் நிலையில், அவர்களின் குழந்தைகள் தற்போது இணைய உலகத்தை கலக்கி வருகின்றனர்.

வைரல் வீடியோ:

சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகள் வரிசையில் கடந்த சில வருடங்களாக முன்னனியில் இருந்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்களின் காதல் காலத்தில் இ ருந்து இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனது முதல் இவர்கள் அனைத்து செயல்களும் ட்ரெண்டிங் தான். இவர்களின் முதல் குழந்தை அய்லா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். சஞ்சீவ் நடத்தி வரும் யூடுயூப் சேனலில் மிகவும் குறுகிய காலத்திலேயே அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்று தந்தது ஐலாவின் சேட்டை தான்.

அம்ரிதாவை பற்றி பாக்கியாவிடம் சொல்லப்போகும் எழில் – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

ஆல்யா தனது 2 வது கர்ப்ப காலத்தில் கடைசி நேரம் வரை சீரியல்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பிற்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதேபோல், இவரது குடும்பத்திற்கும் அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். ஆல்யா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 2 வது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவரது குழந்தையை பார்க்க அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினார்கள். இந்நிலையில் ஆல்யாவின் முதல் மகள் ஐலா குழந்தையை பார்க்க சென்றதுடன் போன வீடியோவை அவர்கள் முடித்திருந்தனர்.

சமீபத்தில் வெளியான வீடியோவில் அக்கா ஆகிவிட ஐலா தன் தம்பியை பார்க்க வீட்டில் வாசலுக்கே வந்து வரவேற்றார். குழந்தையை பார்த்ததும் ஹாய் சொல்வதும், முத்தம் கொடுப்பதும் என்று தன் பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு வந்த சந்தோசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த வீடியோவிற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!