2வது குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஆல்யா மானசா வெளியிட்ட முதல் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
2வது குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஆல்யா மானசா வெளியிட்ட முதல் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
2வது குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஆல்யா மானசா வெளியிட்ட முதல் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
2வது குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஆல்யா மானசா வெளியிட்ட முதல் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது தான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் அதற்குள் உடம்பை வலுக்கட்டாயமாக குறைந்து ஒரு ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருமணமும் செய்து கொண்ட ஜோடி தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமான சில நாட்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் போது கூட ஆலியா சீரியலில் நடித்து வந்தார். தற்போது ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த சில நாட்களிலேயே ஆலியா உடம்பை குறைத்து சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

ராஜா ராணி சீரியலை தொடர்ந்து ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். இதுமட்டுமல்லாமல் கர்ப்பமாக இருந்தாலும் நான் மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என கூறியிருந்தார். பின்பு, குழந்தை பிறந்து மீண்டும் ஆலியா அறிமுகமாகும் வரைக்கும் மட்டும் என சொல்லி ரியா என்ற புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தினர்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் சீரியலில் இணையமாட்டேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அவ்வப்போது தனது மகன் அர்ஷுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டபடி இருக்கிறார். குழந்தை பிறந்து முழுசாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அதற்குள் உடம்பை வலுக்கட்டாயமாக குறைந்து ஒரு ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!