‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகிய ஆலியா தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகிய ஆலியா தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகிய ஆலியா தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகிய ஆலியா தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா தற்போது இரண்டாவது முறை கர்ப்பம் ஆனதை தொடர்ந்து பிரசவ காலம் நெருங்கி வரும் காரணத்தால் தொடரை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் ஆலியா அவரது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்:

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக வரவேற்பு காணப்பட்ட சீரியலில் ஒன்று ராஜா ராணி. அந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியாவும் சேர்ந்து நடித்தனர். 2017-ம் ஆண்டு சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் புதுமையான கதையை மக்கள் விரும்பும் வகையில் இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆலியாவும் அழகான பொன் சிரிப்பினாலும் , எதார்த்த நடிப்பினாலும் மக்களிடையே அதிகமாக பேசப்பட்ட ஒரு சின்னத்திரை கதாநாயகியானார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – குவியும் லைக்குகள்!

இவ்வாறு சீரியல் வெற்றிகரமாக 582 எபிசோடுகளை கடந்து 2019 ஆம் ஆண்டில் இறுதிக்கு வந்தது. தொடரில் ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா இடையே ரியல் காதல் மலர்ந்து திருமணமும் ஆனது. சஞ்சீவ் அம்மா ஆலியாவை அக்கறையாகவும் அன்பாகவும் பார்த்து கொள்வது போன்ற வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார். இவற்றை பார்க்கும் பார்வையாளர்களுக்கு இப்படி ஒரு மாமியார் தங்களுக்கு இல்லையே என்று பொறாமை பட வைக்கும். சாதி, மதங்களை தாண்டி காதலை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு அழகான ஐலா பாப்பாவும் பிறந்தது.

குழந்தை பிறந்த நாளில் தொடங்கி அவருக்கு பெயர் சூடும் விழா உட்பட அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்வார்கள். ஐலா பிறப்பிற்கு பின் மீண்டும் சின்னத்திரையில் இணைவாரா என ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே ராஜா ராணி 2 விலும் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது இரண்டாவது குழந்தை கர்ப்பமானதை தொடர்ந்து குழந்தை விரைவில் பிறக்க உள்ளதால் சீரியலை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் ஆலியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐலாவுடன் நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும், ஐலா பாப்பாக்கென தனி ரசிகர் பக்கங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!