
Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விவரம் இதோ!
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு செல்லுபடி காலம் கொண்ட சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை கூடுதல் சலுகைகளுடன் அளிக்கிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ரீசார்ஜ் திட்டம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்டு திட்டங்களுக்கான விலையை உயர்த்தி இருக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் கூடுதல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சில பாக்கெட் ஃபிரெண்ட் திட்டங்களையும் வழங்கி வருகிறது. இப்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கி இருக்கும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் உள்ள மிக நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களின் முழு விவரத்தையும் காணலாம்.
ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.666 விலையில் 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீச்சார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டா, 100 இலவச SMS, அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி சலுகைகளும் இருக்கிறது. இதனை தொடர்ந்து 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ.719 ரீச்சார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 இலவச SMS, அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவுறுத்தல்!
தொடர்ந்து ரூ.1066க்கான ரீச்சார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 இலவச SMS, அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ பயன்பாடு, டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT மற்றும் 5 GB அதிக டேட்டாவும் கிடைக்கிறது. அடுத்ததாக, ரூ.1199க்கான ரீச்சார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 3 GB டேட்டா, 100 இலவச SMS, அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி சலுகையுடன் வருகிறது.
ஏர்டெல்:
முதலாவதாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.719 விலையில் தினசரி 1.5 GB டேட்டாவை 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் விங்க் இலவச ம்யூசிக் சந்தாவுடன் வழங்குகிறது. தொடர்ந்து 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் உள்ள ரூ.839 ரீச்சார்ஜ் திட்டம், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 இலவச SMS, அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் அமேசான் ப்ரைம் வீடியோ இலவச எடிசன் ஆகியவை கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ.445க்கான ரீச்சார்ஜ் திட்டமானது மொத்தம் 6 GB டேட்டா, 100 இலவச SMS ஆகியவற்றுடன் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் விங்க் இலவச ம்யூசிக் சந்தாவும் வழங்கப்படுகிறது.
வோடாபோன் ஐடியா:
இந்நிறுவனம் தினசரி 1.5 GB டேட்டாவை 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ.719 விலையில் அளிக்கிறது. அதே நேரத்தில் வோடாபோன் ஐடியாவின் ரூ.839 திட்டமானது ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவுடன் தினசரி 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் சில கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.