அர்ஷ் பாப்பாவிற்கு முதல் மொட்டை போட்ட சஞ்சீவ், ஆலியா ஜோடி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
அர்ஷ் பாப்பாவிற்கு முதல் மொட்டை போட்ட சஞ்சீவ், ஆலியா ஜோடி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
அர்ஷ் பாப்பாவிற்கு முதல் மொட்டை போட்ட சஞ்சீவ், ஆலியா ஜோடி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
அர்ஷ் பாப்பாவிற்கு முதல் மொட்டை போட்ட சஞ்சீவ், ஆலியா ஜோடி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவனுக்கு முதல் மொட்டை போட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

சஞ்சீவ் ஆலியா ஜோடி:

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் சஞ்சீவ் ஆலியா ஜோடி. இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறாள். சமூக வலைத்தளங்களில் ஐலாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆலியாவும் ஐலாவும் இணைந்து விளம்பர படங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ராதிகாவை பிரிய மாட்டேன் என சண்டையிடம் கோபி, சண்டை வேண்டாம் என கெஞ்சிய மயூரா – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

அப்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதனால் சீரியலை விட்டு விலகிய அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துள்ள ஆலியா தற்போது குழந்தைகளை முழு நேரமும் பார்த்து வருகிறார். மேலும் தனது குழந்தைகளுடன் பல வீடியோக்களை பதிவிடுவார். ஆனால் இன்னும் அர்ஷ் பாப்பாவின் முகத்தை அவர் காட்டவே இல்லை. இந்நிலையில் தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

Exams Daily Mobile App Download

அதில் அர்ஷ் பாப்பாவிற்கு முதல் மொட்டை போட்டிருக்கின்றனர். அதன் பின் அவருக்கு முஸ்லீம் முறைப்படி ஒரு சில சடங்குகள் செய்யப்படுகின்றது. அந்த வீடியோவில் கூட அர்ஷ் பாப்பாவின் முகத்தை காட்டவில்லை. மொட்டை அடிக்கும் போது அர்ஷ் அழ ஐலா அக்கா அதை பார்த்து வருத்தப்படுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் அர்ஷ் முகத்தை காட்ட வேண்டும் என கமெண்ட் செய்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!