பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சிகள் – கல்வித்துறை அமைச்சர் உரை!

0
பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சிகள் - கல்வித்துறை அமைச்சர் உரை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு எதிர்கால தொழில்நுட்பத்தை கற்பிக்கும் வகையிலான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார.

AI தொழில்நுட்பம்:

தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு என்ற தலைப்பில் காக்னீசன்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சிறுசேரியில் இரண்டு நாள் பயிற்சி ஏற்பாடுகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. இவ் விழாவை தொடங்கி வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றியுள்ளார். அதில் பள்ளி மாணவர்களின் கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை இணைத்து எப்படி கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அறிவு பொருளாதரத்தை நோக்கி செல்வதன் மூலம் தமிழ்நாடு உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும்.

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.280000/-

கடந்த ஆண்டு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது 12 அரசு பள்ளிகளின் மாணவர்கள் 4226 பேர் கலந்து கொண்ட தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் வாய்ப்பு திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டம் தொடர்ந்து திருச்சி கோவை மதுரை மற்றும் சென்னையில் புறநகர் பகுதிகளில் உள்ள 40 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. பள்ளிக் கல்வியை உருமாற்றவும் வழிநடத்தவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!