CBSE கல்வி வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.67,000/- || கால அவகாசம் நீட்டிப்பு!  

0
CBSE கல்வி வாரியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.67,000/- || கால அவகாசம் நீட்டிப்பு!  

CBSE என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் Deputation முறைப்படி  நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 12.03.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் CBSE
பணியின் பெயர் Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer, Under Secretary, Section Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024 (Updated)
விண்ணப்பிக்கும் முறை Online

CBSE காலிப்பணியிடங்கள்:

CBSE நிறுவனத்தில் Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer, Under Secretary, Section Officer ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

CBSE பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சிகள் – கல்வித்துறை அமைச்சர் உரை!

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.15,600/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் (Deputation முறைப்படி) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CBSE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://cbseit.in/cbse/2024/recdep/index.aspx என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 12.03.2024 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!