நடப்பு நிகழ்வுகள் – 3 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 3 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 3 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 3 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

ஹர் கர் திரங்காவைக் கொண்டாடும் வகையில் இந்திய அஞ்சல் துறையானது மிகப்பெரிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.

  • இந்த வருடத்திற்கான சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் ஹர் கர் திரங்காவைக் கொண்டாடும் வகையிலும் இந்திய அஞ்சல் துறையானது அதன் கிட்டத்தட்ட 1.60 லட்சம் தபால் நிலையங்களின் மூலம் தேசியக் கொடியை விற்பனை செய்யக்கூடிய முன்னெடுப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
  • நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் நமது மூவர்ண கொடியானது கிடைக்க வேண்டும் மற்றும் அவர்களின் உள்ளத்தில் நாடு பற்றை மேலும் உறுதிபட வளர்க்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 2022ஆம் ஆண்டின் முன்னெடுப்பு பிரச்சாரமானது நாட்டில் மகத்தான வெற்றியைப் பெற்றது. மேலும் கிட்டத்தட்ட ஆறு கோடி மக்கள் “ஹர் கர் திரங்கா” வலைதளத்தில் தங்களின் மூவர்ண கொடியை ஏற்றி தங்களின் செல்ஃபிகளைப் பதிவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எய்ம்ஸ் புது தில்லி வளாகத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டை மேம்படுத்துவதற்காக அந்நிறுவனமானது(AIIMS), IREDA அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.

  • எய்ம்ஸ் புது தில்லி கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டைத் தொடங்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக எய்ம்ஸ் புது தில்லி நிறுவனமானது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன்(IREDA) ஆகஸ்ட் 01 2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இந்த வளாகத்தில் சூரிய சக்தி(solar) திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், AIIMS நிறுவனமானது அதன் மின்சாரச் செலவைக் கணிசமாகக் குறைக்கும். மேலும் IREDA இன் உதவியுடன் அதன் கார்பன் தடயத்தைக் குறைப்பதையம் நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தலைமுறை காந்த அதிர்வு இமேஜிங்(MRI) ஒளிப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • அறிவியல் & தொழில்நுட்பம், அணுசக்தி, பொது குறைகள், ஓய்வூதியத்திற்கான மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், ஆகஸ்ட் 01 அன்று இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, இலகுரக, மலிவு மற்றும் அதிவேக(1.5 டெஸ்லா) அடுத்த தலைமுறை காந்த அதிர்வு இமேஜிங் (MRI) ஒளிப்பதிவு இயந்திரத்தை புதுதில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒளிப்பதிவு இயந்திரத்தின் குறைவான விலையின் மூலம் சாமானியர்கள் எளிதாக வாங்க முடியும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது “மேக் இன் இந்தியா – மேட் ஃபார் தி வேர்ல்ட்” என்ற முன்னெடுப்பின் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.

NHPC மற்றும் ALIMCO ஆகியவை திவ்யாங்ஜர்களின் மேம்பாட்டிற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

  • NHPC வேலை திட்டங்களுக்கு அருகில் உள்ள சுமார் 1,000 திவ்யாங்ஜன்களுக்கு(ஊனமுற்றோர்) உதவி சாதனங்கள் மற்றும் தேவைபடுகின்ற உதவிகளை வழங்குவதற்காக  இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் (ALIMCO) மற்றும் NHPC நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 01 அன்று கையெழுத்திட்டுள்ளன.
  • இது குறிப்பாக வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் உள்ள திவ்யாங்ஜன்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சீ கியான் பெங் பதவியேற்பு.

  • சில தவறான குற்றம் சாட்டப்பட்ட டான் சுவான்-ஜி(முன்னாள் சிங்கப்பூர் சபாநாயகர்) சமீபத்தில் பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சீ கியான் பெங் ஆகஸ்ட் 02 அன்று பதவியேற்றுள்ளார்.                                                                                                      
  • சிங்கப்பூர் ஒலிம்பிக் அறக்கட்டளையின் கீழ் தலைமை குழு உறுப்பினராக உள்ளார். மேலும் இவர் சிங்டெல் நிறுவனம் மற்றும் தேசிய பூங்கா வாரியம் போன்றவற்றில் முன்பு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நியமனத்தின் மூலம் அவர் 11வது சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.

துருக்கியிடமிருந்து 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆளில்லா விமானங்களை இந்தோனேஷியா வாங்க திட்டமிட்டுள்ளது.

  • இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகமானது ஆகஸ்ட் 02 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு முக்கிய பகுதியாக துருக்கிய ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 12ஆளில்லா விமானங்களை(drones) இந்தோனேசிய அரசாங்கம் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
  • துருக்கிய தலைநகர் அங்காராவை தலைமையிடமாகக் கொண்ட துருக்கிய ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் கடந்த பிப்ரவரி 03ஆம் தேதி மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஆளில்லா விமானங்களானது வாங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ANKA ஆளில்லா விமங்களின் 12 அலகுகள் வரும் நவம்பர் 2025 க்கு முன் இந்தோனேசியா நாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் தனித்த முத்தரப்பு உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்த திட்டமிட்டுள்ளது.

  • ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் தனது முதல் முழுமையான முத்தரப்பு உச்சி மாநாட்டை ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்கா தலைமையேற்று நடத்தும் என அமெரிக்க வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • “பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கும், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறை மற்றும் பொருளாதார வளத்தை மேம்படுத்துவத்துதல் ஆகிய கருப்பொருளை நோக்கமாக கொண்டு இந்த உச்சி மாநாடானது நடைபெற உள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மாநில செய்திகள்

சாகச விளையாட்டு மற்றும் நீர் சுற்றுலா கொள்கை 2023 க்கு உத்திர பிரதேச மாநில அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.

  • உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை 2023 ஆம் ஆண்டுக்கான சாகச விளையாட்டு மற்றும் நீர் சுற்றுலாக் கொள்கைக்கு ஆகஸ்ட் 01 அன்று மக்களவையில் ஒப்புதல் அளித்தது.
  • அனைத்து உள்நாட்டு நில அடிப்படையிலான நீர் வழித்தடங்கள் மற்றும் அணைகள், வான்வழி, நீர்த்தேக்கங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள பல்வேறு நீர்நிலைகள்(குட்டைகள் உட்பட) மற்றும் மாநில நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து சாகச நடவடிக்கைகளுக்கும் இந்த கொள்கையானது பொருந்தும் என மாநில அமைச்சரவை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,000 மெகாவாட் அளவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

  • தமிழக மாநிலத்தில் கிட்டத்தட்ட 4000 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்நிலையங்களை அமைக்கப்பட உள்ளதாக ஆகஸ்ட் 01 2023 அன்று பாராளுமன்றத்தில் மத்திய மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
  • இந்த முன்னெடுப்பு திட்டத்திற்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த திட்டமானது தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் அமைப்பால் (TANTRANSCO) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போபாலில் ‘உன்மேஷா 2023’ என்ற இலக்கிய விழாவை இந்திய குடியரசு தலைவர் தொடங்க உள்ளார்.

  • இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் மூன்று நாள் சர்வதேச இலக்கிய விழாவான ‘உன்மேஷா 2023’ ஆகஸ்ட் 03 2023 அன்று தொடங்கி வைக்க உள்ளதாக சாகித்ய அகாடமி அமைப்பின் செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.
  • மாபெரும் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து இலக்கியச் சந்திப்புடன், பழங்குடியின மற்றும் நாட்டுப்புற வெளிப்பாடுகளின் தேசிய விழாவான ‘உத்கர்ஷா’ தேசிய சங்கீத நாடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

5,000 கோடி மதிப்புள்ள திட்டத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கர்நாடக மாநில அரசும் கையெழுத்திட்டுள்ளன.

  • 5,000 கோடி மதிப்பளவிலான முதலீட்டில் மாநிலத்தின் இரண்டு மார்க்கீ திட்டங்களை மேம்படுத்துவதற்காக, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய ஐபோன் உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒரு பகிர்மான ஒப்பந்தத்தை(LoI) மேற்கொண்டுள்ளதாக கர்நாடக மாநில அரசானது ஆகஸ்ட் 02 அன்று தெரிவித்துள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதற்கட்டமாக ₹3,000 கோடி ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பின்பு மீதமுள்ள 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

மேஜர் ஜெனரல் அமிதா ராணி MNS சேவையின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இராணுவபடையின் நர்சிங் சேவை துறைக்கான(MNS) கூடுதல் இயக்குநர் ஜெனரலாக மேஜர் ஜெனரல் அமிதா ராணி ஆகஸ்ட் 01 2023 அன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவபடை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவர் ஜெனரல் அதிகாரி துறை டெல்லி ராணுவ மருத்துவமனையின் கீழ் உள்ள (R&R) நர்சிங் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார் மற்றும் இவர் இந்த நியமனத்திற்கு முன் இராணுவ மருத்துவமனையின் முதன்மை மேலாளராக (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Equifax India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆதித்யா B. சட்டர்ஜி நியமனம்.

  • மும்பையை மையமாக கொண்ட Equifax Credit Information Services நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆதித்யா பி. சட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 01, 2023 அன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பொருளாதார மற்றும் நிதித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவம் கொண்ட இவர் தொடர்ந்து வளர்ந்து வரும் நிறுவனத்த்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சேவைகளை வழங்கி மேம்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விருதுகள்

தென்னாப்பிரிக்க நாட்டின் உயரிய தேசிய விருதானது இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • தென்னாப்பிரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரேசா மியா தலைமையிலான பெகாசஸ் யுனிவர்சல் ஏரோஸ்பேஸ் குழுவிற்கு, புதுமை மற்றும் ஆராய்ச்சிக்கான பிரிவில் பெரும் மதிப்புமிக்க தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப(NSTF) விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு மேலாக செங்குத்து மேலேற்றம் மற்றும் தரையிறங்கும் வகையிலான விமான திட்டத்தை உருவாக்கியதற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றமானது இந்த உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருதானது கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘தகைசால் தமிழர்’ விருதானது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்க உள்ளதாக சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது 2023 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1962-இல் “விடுதலை” நாளிதழின் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து தனது மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும்,  The Modern Rationalist – (ஆங்கிலம்), உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு ஆசிரியருமான இவர் தனது சிறப்பான பணிகளின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றுவதற்காக இந்த விருதிற்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!