காமராஜர் பல்கலை இளங்கலை & முதுகலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
காமராஜர் பல்கலை இளங்கலை & முதுகலை மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
காமராஜர் பல்கலை இளங்கலை & முதுகலை மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
காமராஜர் பல்கலை இளங்கலை & முதுகலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாலை நேர கல்லூரி:

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது நாம் அறிந்ததே. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவராலும் கல்லூரியில் சென்று படிக்க இயலாது அதன் காரணமாக மாலை நேர கல்லூரி செயல்பட்டு வருகிறது. தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை நேர கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NCA தலைமை கிரிக்கெட்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – BCCI அறிவிப்பு!

2021 – 22 ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொறியியல், அறிவியல் , பி. காம் , பி.பி.ஏ, பி.எஸ்.சி , கணிதம் ஆகிய வகுப்புகளும் அதனை தொடர்ந்து முதுகலை ஆங்கிலம், எம்.எஸ்.சி கணிதம் ஆகியனவும் நடத்தப்படுகின்றன. மாலை நேர கல்லூரியும் பிற கல்லூரிகள் போலவே தினசரி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மாலையில் மட்டுமே நடத்தப்படும் வகுப்புகள் அனைத்தும் அனுபவமிக்க பேராசிரியர்களை கொண்டு நடத்தப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் இதற்கு மாணவர்களிடமிருந்து மிக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ மாணவியருக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் இது குறித்த விவரங்களுக்கு 0452- 2532333 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!