NCA தலைமை கிரிக்கெட்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – BCCI அறிவிப்பு!

0
NCA தலைமை கிரிக்கெட்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - BCCI அறிவிப்பு!
NCA தலைமை கிரிக்கெட்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - BCCI அறிவிப்பு!
NCA தலைமை கிரிக்கெட்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – BCCI அறிவிப்பு!

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தலைமை கிரிக்கெட்டுக்கான பொறுப்பை வகிக்க தகுதியுடையவர்களது விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வரவேற்றுள்ளது.

BCCI விண்ணப்பம்

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைமை பொறுப்பை வகித்து வருகிறார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் வலிமையை உருவாக்குவதில் கணிசமான பங்கு வகித்த ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும் U-19 அணி மற்றும் இந்தியா A அணியின் பயிற்சியாளராகவும் கடந்த ஜூலை 2019 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தனது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ள அவரது பதவிக்கு BCCI யின் நெறிமுறையின்படி, தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் கூடுதல் பெண் போலீசார் நியமனம் – மத்திய அரசு முடிவு!

இருப்பினும் ராகுல் டிராவிட் தனது தலைமை பதவிக்கு இரண்டு வருடம் நீட்டித்து விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இப்பதவிக்கான விண்ணப்பங்களை செலுத்தும் கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் T 20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021 நவம்பர் மாதத்துடன் முடிவடைவதால், டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது. கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான தற்போதைய வயது வரம்பு 60 ஆண்டுகள் ஆகும்.

அதன் படி கடந்த மே மாதத்தில் ரவி சாஸ்திரிக்கு 59 வயது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை T 20 போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் டிராவிட் அந்த பதவிக்கு வரலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணியில், இந்திய கிரிக்கெட் அணி சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு போட்டி தொடர்களில் இந்திய அணி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ராகுல் டிராவிட் சமீபத்தில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சென்றிருந்தார். அப்போது ஆறு ஆட்டங்கள் நிறைவுற்ற பிறகு, நீண்ட கால அடிப்படையில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்புகிறாரா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. எனினும் அவர் இந்த விஷயத்தில் உறுதியான முடிவை கூறவில்லை. இருப்பினும் NCA ல் அனைத்து கிரிக்கெட் பயிற்சிகளையும் நடத்துவதற்கு தலைமை கிரிக்கெட் ஒரு முக்கிய பொறுப்பாகும். எனவே இந்த பதவிக்கு தகுதியான ஆட்களை அமர்த்த BCCI எதிர்பார்த்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!