ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு – தொழிற்பயிற்சி நிலையத்துணை இயக்குனர் அறிவிப்பு!

0
ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - தொழிற்பயிற்சி நிலையத்துணை இயக்குனர் அறிவிப்பு!
ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - தொழிற்பயிற்சி நிலையத்துணை இயக்குனர் அறிவிப்பு!
ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு – தொழிற்பயிற்சி நிலையத்துணை இயக்குனர் அறிவிப்பு!

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து கல்லூரிகளில் கடந்த ஜூலை மாதம் முதல் 2021 – 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இங்கு 8 மற்றும் 10 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிப்பு முடித்தவுடன் வேலை வாய்ப்பும் பெறுகின்றனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!

இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி பெற விரும்புவோர் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும்.

12 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. அதன்படி மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம், லேப்டாப், வரைபடக் கருவிகள், சீருடை, காலணிகள், பயிற்சிக்கு தேவையான பொருட்கள் ஆகிய அனைத்தும் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று செய்து குறிப்பில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!