12 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
12 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு - இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை! விண்ணப்பங்கள் வரவேற்பு!
12 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு - இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை! விண்ணப்பங்கள் வரவேற்பு!
12 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்ட இசை பள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் தற்போது தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவா், மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவா், மாணவிகள் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது என்றும் 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்கும் மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்வமுள்ள 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

எழுத படிக்க தெரிந்தவர்கள் தவில், நாதஸ்வரம் ஆகிய கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டுகள் நடைபெறும் இந்த படிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் ஆர்வம் உள்ள மாணவா், மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை அறிய தலைமையாசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி. சவேரியார்புரம், சிலுவைப்பட்டி தூத்துக்குடி-2 என்ற முகவரியில் நேரிலும், 94877 39296 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here