தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் – நவம்பர் 1 வரைவு பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் - நவம்பர் 1 வரைவு பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் - நவம்பர் 1 வரைவு பட்டியல் வெளியீடு!தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் - நவம்பர் 1 வரைவு பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் – நவம்பர் 1 வரைவு பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொள்ள நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல்:

தமிழக மக்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமகனும் வாக்களிக்க வேண்டும். அது அவர்களின் ஜனநாயக கடமையாக உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 16 முதல் பல்கலை திறப்பு, நேரடி வகுப்புகள் – நிர்வாகம் அறிவிப்பு!

இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றில் இருந்து நவம்பர் 30ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ அல்லது பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பின்னர் டிசம்பர் 20-ம் தேதி ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் அல்லது மாற்றம் செய்ய தேவையான வாக்காளர்கள் இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி எனப்படும் செல்போன் செயலி மூலமாக விண்ணப்பிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!