ஆகஸ்ட் 16 முதல் பல்கலை திறப்பு, நேரடி வகுப்புகள் – நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள டெல்லி பல்கலைக்கழக நேரடி வகுப்புகளை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் அறிவியல் மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை திறப்பு
டெல்லியில் கொரோனா பரவல் பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து அனைத்து அறிவியல் படிப்புகளில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை துவங்க இருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில், ‘டெல்லியில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்குகிறது.
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்தில் கடும் ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட உள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட பின்னர், தற்போது ஆய்வகங்களின் பயன்பாடுகளுக்காக இறுதி ஆண்டு மாணவர்களை மட்டும் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி துறைகளுக்கு அனுமதிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான புதிய அறிவிப்பில், டெல்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16 முதல் நேரடி முறையில் நடத்தப்படும்.
TN Job “FB
Group” Join Now
இதுவரை டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் எந்தவொரு உடல் வருகையும் தன்னார்வமாக இருந்தது. இருப்பினும் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அதாவது அறிவியல் வகுப்புகளை முற்றிலும் நேரடி முறையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முதல் முடிவு இதுவாகும். தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நாட்காட்டி தொடங்கியவுடன், அவர்களும் நேரடி வகுப்புகளுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிமாநில மாணவர்களுக்காக விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் கற்பித்தல் முறை தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.