பிரபல பிக்பாஸ் நடிகைக்கு மீண்டும் கொரோனா தொற்று – அவரே வெளியிட்ட பதிவு!
துள்ளுவதோ இளமை படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
நடிகை ஷெரின்:
தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷெரின். இவர் அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
மாசாணி ஆட்களை அடித்து நொறுக்கி விடும் மாறன் – இன்றைய ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ எபிசோட்!
அதன் பின்னர் நீண்ட காலமாக திரையுலகில் வராத இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலமாக இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது வெகுளியான பேச்சும், உண்மை தன்மையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நல்ல குண்டாக உள்ளே சென்ற அவர் வெளியே வந்த பின்னர் தனது உடல் எடையை குறைத்தார். அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
TN Job “FB
Group” Join Now
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரை பாலோ செய்யும் ரசிகர்களும் அதை பார்த்து ரசித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு லேசாக கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.