கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் – மத்திய அரசுக்கு அவகாசம்!
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அளிக்கப்பட்ட மனு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சீரான நிவாரண தொகை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்றின் தாக்கம் குறைக்கப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் இறப்பு விகிதம் அதிகமாக இருந்து வந்தது.
ICC T20 கிரிக்கெட் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு – அக்.24 இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை!
இந்நிலையில் வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சால், ரீபக் கன்சல் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தலா, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் 4 லட்சம் ரூபாய் தரும்படி உத்தரவிட முடியாது எனவும், நாடு முழுவதும் ஒரே சீரான நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
TN Job “FB
Group” Join Now
மேலும் கொரோனாவால் இறந்ததை உறுதி படுத்தும் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பாக எளிய விதிமுறைகளை வகுக்கும் படியும் அறிவுறுத்தியது. மீண்டும் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதில் கொரோனா இறப்பு நிவாரண விதிமுறைகளை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதால், கூடுதல் கால அவகாசம் வழங்கும் படி மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டது.