“பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மாவின் கடைசி எபிசோட் – வெளியான புகைப்படம்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" லட்சுமி அம்மாவின் கடைசி எபிசோட் - வெளியான புகைப்படம்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மாவின் கடைசி எபிசோட் – வெளியான புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா கதாபாத்திரம் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி அம்மாவாக நடித்த ஷீலா உடன் படப்பிடிப்பு குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடந்த வாரம் லட்சுமி அம்மா இறந்து விட்டதாக காட்டப்பட்டது. மேலும் அவருக்கு நிஜத்தில் நடப்பது போல ஒன்று விடாமல் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. வாக்கரிசி போடுவது வரை விடாமல் அனைத்து காட்சிகளிலும் நடித்த நடிகை ஷீலாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் கதாபாத்திரம் இன்றைய எபிசோட் உடன் முடிவடைந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் – வெளியான வதந்திகள்!

மேலும் இன்றைய எபிசோடில் கண்ணன், தனது அண்ணன்களுக்கு எதிராக மாறுவது போல காட்டப்பட்டது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் TRP எகிறி உள்ளது. TRPக்காக தான் இந்த சீரியலில் இருந்து லட்சுமி அம்மா நீக்கப்பட்டார் என ஒரு தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர். அதே போல மற்றொரு தரப்பில் ஷீலாவின் மகன் ஜீ தொலைக்காட்சிக்கு சென்று விட்டதால் தான் இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” அக்.3 முதல் ஒளிபரப்பு – ப்ரோமோ வெளியீடு!

ஆனால் மூன்று ஆண்டுகளாக இந்த சீரியலில் ஏற்றத் தாழ்வுகளின் போது நடிகை ஷீலா இருந்தார். ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டதால் வருத்தமாக இருப்பதாக ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் இறுதியாக எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ரசிகர்கள் சோகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!