‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் – வெளியான வதந்திகள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் - வெளியான வதந்திகள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் - வெளியான வதந்திகள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் – வெளியான வதந்திகள்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஷீலா. அவர் தற்போது இறந்து விட்டதாக காட்டப்பட்டுள்ளது. அதனால் அவர் கதாபாத்திரம் முடிந்ததை அடுத்து, சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், அண்ணிகளின் அக்கறையையும் மையமாக வைத்து கதை இருக்கிறது. அவர்களின் அம்மாவாக நடிகை ஷீலா நடித்து வருகிறார். அவர் திடீரென இறந்து விட கண்ணன் வருவதற்குள் இறுதிச்சடங்கு நடைபெற்றதால் அண்ணன்கள் மீது கோபப்படுவது போல கதை காட்டப்படுகிறது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக சீரியலில் இருந்த லட்சுமி அம்மா கதாபாத்திரம் திடீரென முடிவுக்கு வந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடியப்போகும் குஷியில் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

அதனால் சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது நடிகை ஷீலா நடிகர் விக்ராந்தின் அம்மாஆவார். அதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து அவர் அம்மாவை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த் உடன் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு விக்ராந்த் ஒப்புக்கொண்டிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திடீரென அவர் மற்றொரு சேனலில் புது நிகழ்ச்சிக்கு போய் விட்டதால், கோபமடைந்த சேனல் அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தூக்கி விட்டதாக வதந்தி பரவி வருகிறது.

காதலை வெளிப்படுத்தும் சரவணன் & சந்தியா, கோபத்தில் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

ஒரு சிலர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்டுவதற்காக தான், லட்சுமி அம்மா கதாபாத்திரம் இறப்பது போல சீரியல் அமைக்கப்பட்டது. சீரியலில் டி.ஆர்.பி-யை உயர்த்துவதற்கு இப்படி ஏதாவது செய்வது வழக்கம் என பேசி வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் 3 வருடமாக இருந்ததாகவும் திடீரென நல்ல இடத்தில் சீரியல் இருக்கும் போது இப்படி தன்னை நீக்கியுள்ளது வருத்தமாக இருப்பதாக நடிகை ஷீலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!