விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” அக்.3 முதல் ஒளிபரப்பு – ப்ரோமோ வெளியீடு!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 5" அக்.3 முதல் ஒளிபரப்பு - ப்ரோமோ வெளியீடு!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” அக்.3 முதல் ஒளிபரப்பு – ப்ரோமோ வெளியீடு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாகும் என ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

தமிழ் சின்னத்திரையில் முதன் முதலாக சர்வதேச நிகழ்ச்சியான பிக்பாஸ் முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் சீசனில் நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது. அதனால் தொடர்ந்து 4 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி தற்போது ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதலில் வெளியான டீசர் மூலமாக இந்த சீசனும் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என உறுதியான தகவல் வெளியானது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் – வெளியான வதந்திகள்!

அதன் பின்னர் முதல் ப்ரோமோ வெளியானது, எந்த சீசனிலும் இல்லாத அளவு மாறுபட்ட கோணத்தில் பிக்பாஸ் ப்ரோமோ எடுக்கப்பட்டது. அதனால் மக்களிடம் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன் பின்னர் மாறுபட்ட கான்செப்டில் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடியப்போகும் குஷியில் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் சீசனில் நான்காவது ப்ரோமோ வெளியானது. அதில் நடிகர் கமல் வீட்டை பற்றி சொல்லிவிட்டு இந்த சீசன் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் இன்னும் வீட்டிற்குள் செல்லும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இதுவரை பிரியங்கா, சூசன், பிரியா ராமன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!