நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு கடை திறப்பு விழாவில் சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!

0
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு கடை திறப்பு விழாவில் சமந்தா - ரசிகர்கள் வாழ்த்து!
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு கடை திறப்பு விழாவில் சமந்தா - ரசிகர்கள் வாழ்த்து!
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு கடை திறப்பு விழாவில் சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா பிரபல பாடகி சின்மயி புதிதாக துவங்கியுள்ள அழகு நிலையத்தை திறந்து வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா

சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, இந்த திரைப்படத்தின் தெலுங்கு வெர்சனில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய பின் ஆளே மாறிப்போன ரோஷினி – வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்ட சமந்தா குறுகிய காலத்திலேயே பல உயரங்களை எட்டினார். தொடர்ந்து சினிமா உலகில் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில, பல காரணங்களுக்காக நடிகர் நாகசைதன்யாவை தற்போது விவாகரத்தும் செய்திருக்கிறார் சமந்தா, இதற்கிடையில் ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா தற்போது பாடகி சின்மயி புதிதாக துவங்கி இருக்கும் அழகு நிலையத்தை திறந்து வைத்திருக்கிறார்.

“தாய்மை என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான்” – நடிகை நீலிமா கர்ப்பகால டிப்ஸ்!

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, ‘அன்புள்ள சின்மயி, உங்களின் அனைத்து மகத்தான சாதனைகளையும் உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் தொழில் ஆர்வத்தை நான் அறிவேன். கண்டிப்பாக இது மிகவும் அற்புதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்த்துக்கள் பாப்பா’ என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் நடிகை சமந்தா மற்றும் பாடகி சின்மயி இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here