“தாய்மை என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான்” – நடிகை நீலிமா கர்ப்பகால டிப்ஸ்!
தமிழ் சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் அவர் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு துணையாக கணவர் எப்படி இருக்க வேண்டும் என வீடியோ மூலமாக பகிர்ந்திருக்கிறார்.
நடிகை நீலிமா ராணி:
பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நீலிமா ராணி. அவர் முதன் முதலில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் பல படங்களிலும் சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபனாவின் திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம் – இன்ஸ்டா வைரல்!
இந்நிலையில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். அதனால் சீரியலில் இருந்து விலகி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் கர்ப்பகாலத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? எந்த மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும்? என வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவர் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
முதலில் ஏற்கெனவே பெண்கள் கிழக்கு திசை என்றால் ஆண்கள் மேற்கு திசையில் பயணிப்பார்கள் என்கிற எண்ணம் உண்டு. அதிலும், கர்ப்பகாலத்தில் ஏராளமான வாக்குவாதங்கள் வரக்கூடும். கர்ப்பிணி பெண்களை பற்றி புரிந்துகொள்வது ஆண்களின் கடமையும் கூட. அதைப்பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம் என தொடங்கிய அவர், கர்ப்பம் தரித்த பெண்கள் எதிர்கொள்ளும் முதல் பெரிய விஷயம் மூட் சுவிங்ஸ். ஹார்மோன், ஹீமோகுளோபின் உள்ளிட்டவற்றின் மாற்றங்கள்தான், பெண்களுக்கான இந்த மூட் சுவிங்ஸ் ஏற்படுவதற்கான காரணங்கள். அதனால், மிகச் சிறிய விஷயங்களை கூடப் பெரிதாகப் பார்க்கக்கூடும் எண்ணங்கள் தோன்றும்.
திடீரென அழுவது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது, கோபப்படுவது என பல்வேறு விதமான உணர்வுகள் தோன்றும். இதனை எவ்வளவுதான் பெண்கள் கட்டுப்படுத்த நினைத்தாலும், அது அவ்வளவு சீக்கிரம் சரி செய்யமுடியாது என தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் கணவர் உறுதுணையாக இருக்க வேண்டும். மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டு இருப்பது அவர்களுக்கு மன அமைதியைக் கொடுக்கும். இதுபோன்ற நேரங்களில் அரவணைப்பு அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெங்கட் – ரசிகர்கள் உற்சாகம்!
ஏராளமான பழ வகைகள், காய்கறிகளை போதுமான அளவு கையில் வைத்துக்கொள்வது முக்கியம். ஒவ்வொரு முறை மருத்துவரை சென்று பார்க்கும்போதும், மனைவியுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். சந்தோஷமான நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த சர்ப்ரைஸ்களை அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் 24 மணிநேரமும் கூடவே இருக்க முடியாது. ஆனால், உங்கள் மனைவிக்குப் பிடித்த நபரை அவருடன் பயணிக்கச் செய்யலாம். தாய்மை என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான் என்பதை நிச்சயம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அந்த வீடியோவில் அவர் பேசி இருக்கிறார்.