‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய பின் ஆளே மாறிப்போன ரோஷினி – வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய பின் ஆளே மாறிப்போன ரோஷினி - வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய பின் ஆளே மாறிப்போன ரோஷினி - வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய பின் ஆளே மாறிப்போன ரோஷினி – வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நம் அனைவரின் மனதிலும் கண்ணம்மாவாக பதிந்து போனவர் நடிகை ரோஷினி. புதிய போட்டோஷூட் ஒன்றிற்காக ரெடியாகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி:

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக டிஆர்பி ரேட்டிங்கை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக அதில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளனர். இதனால் இவர்களை சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. பாரதி கண்ணம்மா அவ்வவ்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒன்றாக எடுத்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் செல்லும்.

“தாய்மை என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான்” – நடிகை நீலிமா கர்ப்பகால டிப்ஸ்!

பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆன ரோஷினி ஹரிபிரியன் கண்ணம்மாவாக நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கண்ணம்மா கதாபாத்திரத்திற்காக தனது நேர்த்தியான நடிப்பை ரோஷினி வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சமீபத்தில் ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளார். இவர் விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் ரோஷினிக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருப்பதால் தான் சீரியலை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபனாவின் திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம் – இன்ஸ்டா வைரல்!

இது தொடர்பாக, ரோஷினி சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அதில், தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்றும், இது போல் எதிர்காலத்திலும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ஷூட்டிங்கிற்காக புது கெட்டப்பில் மேக்கப் போடும் ரோஷினியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ரோஷினி தனது அடுத்த ப்ரொஜெக்ட்டை தொடங்கிவிட்டார் என்றும், இதனால் இவரை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரோஷினி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here