விஜய் டிவி மைனா நந்தினிக்கு திடீர் ஆப்ரேசன் – வெளியான வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் தற்போது தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்திருக்கும் மைனா நந்தினிக்கு திடீரென ஆப்ரேசன் நடக்க இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அது பிராங்க் வீடியோ என்பதால் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.
நடிகை மைனா நந்தினி:
சின்னத்திரையில் பிரபலமான டிவியான விஜய் டிவியில் பல முன்னணி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா கதாபாத்திரம் மூலமாக மக்களிடம் பிரபலமானவர் தான் மைனா நந்தினி. மதுரை பெண்ணான அவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். தன்னுடைய நகைச்சுவையான பேச்சால் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தது. பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் மூடல் – அரசு அறிவிப்பு!
அவர் தனது கணவர் யோகேஷ் உடன் இணைந்து Mr and Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். இந்நிலையில் நந்தினி தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தற்போது தனக்கு ஆப்ரேசன் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கண்ணில் ஆப்ரேசன் செய்ய இருப்பதாக குடும்பத்தில் இருப்பவர்களை பிராங்க் செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மைனாவின் தம்பி பிரபு அவரிடம் வசமாக சிக்க இன்னும் 1 வாரத்தில் கண்ணில் ஆப்ரேசன் செய்ய இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு பிரபு வருத்தப்பட பின் டாக்டருக்கு போன் செய்து பேசுகிறார். மைனாவின் அப்பா அம்மாவும் அதை நினைத்து அதிர்ச்சி அடைகின்றனர். இறுதியாக அது வெறும் பிராங்க் தான் என மைனா சொல்ல பிரபு செம கடுப்பில் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இதுவரை நடிகையாக மட்டுமே இருந்த மைனா நந்தினி தற்போது தொகுப்பாளினியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.