100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ – விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி!

0
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்' - விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி!
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்' - விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி!
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ – விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்னை கலாய்த்து நடிகை கஸ்தூரி செய்துள்ளார். நீங்களும் அந்த வீட்டிலிருந்து தான் வந்திருக்கிறீர்கள் என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் பலரும் எதிர்பார்த்து வந்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் இன்று ஒருவர் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பல கருத்துக்கள் மற்றும் கமெண்டுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

பாரதி & கண்ணம்மா பிரிந்ததற்கு காரணமே பாக்கியா தான் – ரசிகர்கள் கமெண்ட்!!

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியினை இன்னும் ஒரு எபிசோட் கூட பார்க்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பலரும் தாங்கள் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளனர். நடிகை கஸ்தூரி தான் ஆரம்பத்தில் இருந்து ஒரு எபிசோட் கூட பார்க்கவில்லை என்று தான் பெருமையுடன் சொல்லி கொள்வதாக கூறியுள்ளார். அதற்கு கீழே #tag ஆக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று பதிவிட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலாய்த்து உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி – பலவித திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

பலரும் நீங்களும் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்தவர்தான் என்றும் கூறிவருகின்றனர். அதே போல் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடந்து கொண்ட விதத்தினை விட இந்த போட்டியில் போட்டியாளர்கள் கொஞ்சம் நன்றாகத்தான் நடந்து கொள்கின்றனர் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்க்கு கஸ்தூரி அதை நம்ப வேண்டாம் என்றும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்தும் சில நேரங்களில் பொய்யாகக் கூட இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கஸ்தூரி தேவையில்லாமல் ஒரு டுவிட் செய்து தானே அதில் தானே மாட்டியுள்ளது பலரையும் கலாய்க்க வைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!