இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா – மில்லியனை தாண்டிய பாலோவர்கள்!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகை ஜோதிகா. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் கால் பதித்துள்ளார். தற்போது வரை 1.3 பாலோவர்கள் அவரை பின்தொடர்கின்றனர்.
ஜோதிகா:
தமிழ் சினிமாவில் 90s களின் இறுதியில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. தனது வித்தியாசமான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். தல அஜித் அவர்களின் வாலி திரைப்படத்தில் சோனா என்னும் கதாபாத்திரம் மூலம் சினிமா துறையில் கால் பதித்தார். அதனை தொடர்ந்து சூர்யா, விஜய் என தொடர்ந்த சினிமா பயணத்தில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
திருட்டு வழக்கில் குக் வித் கோமாளி அஸ்வின் கைது? பிரேக்கிங் நியூஸ்!
நடிகர் சூர்யாவுடன் காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகிறார். திருமணமாகி 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தனக்கென தனி பாணியில் படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சினிமா தவிர தஞ்சாவூர் மருத்துவமனை விவகாரத்தில் அதிகம் பேசப்பட்டார் நடிகை ஜோதிகா. தற்போது சமூக வலைத்தளத்தில் தனது முதல் அடியை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
நடிகர் சூர்யா சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கியது தொடர்ந்து தற்போது ஜோதிகா கால் பதித்துள்ளார். இமயமலை உச்சியில் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை முதல் பதிவாக பகிர்ந்துள்ளார். சுதந்திர தினத்தன்று மலையேற்றம் சென்ற போது எடுத்ததாக அதில் கூறியுள்ளார். இதுவரை 1.3 மில்லியன் பாலோவர்கள் அவரை பின்தொடர்கின்றனர். ஜோதிகா சூர்யா, கார்த்தி, அவர்களின் தங்கை பிருந்தா சிவகுமார், 2டி எண்டெர்டெயின்மெண்ட் என 4 கணக்குகளை பின் தொடர்கிறார்.