பைக் விபத்தில் சிக்கி கையில் காயமடைந்த சன் டிவி ‘கயல்’ சைத்ரா ரெட்டி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
பைக் விபத்தில் சிக்கி கையில் காயமடைந்த சன் டிவி 'கயல்' சைத்ரா ரெட்டி - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
பைக் விபத்தில் சிக்கி கையில் காயமடைந்த சன் டிவி 'கயல்' சைத்ரா ரெட்டி - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
பைக் விபத்தில் சிக்கி கையில் காயமடைந்த சன் டிவி ‘கயல்’ சைத்ரா ரெட்டி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

சன் டிவியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட “கயல்” சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி படப்பிடிப்பின் போது அடிபட்டதாக சமீபத்தில் தெரிவித்த நிலையில் காயத்துடன் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடித்து வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கயல் சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் வில்லியாக நெகடிவ் ரோலில் நடித்தவர் சைத்ரா ரெட்டி. அவர் முதன்முதலில் விஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் பின் ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். இவ்வளவு அழகான வில்லியை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு திருமணத்திற்கு பின்னும் அழகில் குறையில்லாமல் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் நடிகை நயன்தாரா வசிக்க இருக்கும் வீட்டில் விலை இவ்வளவா? ஷாக் ரிப்போர்ட்!

வில்லியாக இருந்த அவருக்கு சன் டிவி “கயல்” சீரியல் கதாநாயகியாக மாற வாய்ப்பு கொடுத்தது. அதில் ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சய் உடன் நடித்து வருகிறார். அந்த சீரியல் தொடங்கப்பட்டு முதல் வாரத்திலேயே TRPயில் முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பல முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி கயல் சீரியல் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த சீரியலில் நடிக்கும் சைத்ராவிற்கு பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

பிரியங்காவுடன் முட்டிக் கொண்ட தாமரை, ஏற்றி விடுவது போல டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் – ப்ரோமோ ரீலிஸ்!

இந்நிலையில் அவர் கையில் அடிபட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில ரசிகர்கள் உங்க கை பரவாயில்லையா வண்டி எப்படி இருக்கிறது என வண்டியை பற்றியும் கேட்டுள்ளனர். மேலும் கையில் இவ்வளவு பெரிய அடி இருந்தாலும் தொடர்ந்து கயல் சீரியலில் அவர் நடித்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவர் சீரியலில் வண்டி ஓட்டுவது போல சீன்ஸ் எடுக்கப்பட்டுள்ளது போல அதற்காக அவர் ஹெல்மெட் உடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!