மகனுடன் முதன்முறையாக வீட்டிற்கு வந்த நடிகை ஆலியா, உற்சாகத்தில் ஐலா – வைரலாகும் வீடியோ!

0
மகனுடன் முதன்முறையாக வீட்டிற்கு வந்த நடிகை ஆலியா, உற்சாகத்தில் ஐலா - வைரலாகும் வீடியோ!
மகனுடன் முதன்முறையாக வீட்டிற்கு வந்த நடிகை ஆலியா, உற்சாகத்தில் ஐலா - வைரலாகும் வீடியோ!
மகனுடன் முதன்முறையாக வீட்டிற்கு வந்த நடிகை ஆலியா, உற்சாகத்தில் ஐலா – வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவரான ஆலியா மானசாவிற்கு சில நாட்களுக்கு முன் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது மகனை முதன்முறையாக வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் சஞ்சீவ் ஆலியா. அவர்களுக்கு திருமணம் முடிந்து ஐலா என்ற மகள் இருக்கிறாள். சஞ்சீவ் ஆலியா ஜோடியை போலவே ஐலாவிற்கும் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அப்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். ஆலியாவிற்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

துர்காவிற்கு வெண்பாவை திருமணம் செய்துவைக்க நினைக்கும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அர்ஷ் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் ஆலியாவின் மகன் பிறந்த அன்றே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனான். இந்நிலையில் ஆலியா தன்னுடைய பிரசவத்தின் அன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ஐலா பாப்பா தன்னுடைய தம்பியை பார்த்த முதல் தருணத்தை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட பேர் வாழ்த்துக்களை சொன்னார்கள்.

கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

இந்நிலையில் ஆலியா தன்னுடைய மகனை வீட்டிற்கு அழைத்து வரும் அழகான தருணங்கள் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் ஆலியா காரில் வந்து நிற்க ஐலா பாப்பா குதித்துக் கொண்டு ஓடி தனது தம்பியை வரவேற்கிறார். அந்த அழகான காட்சியை பார்த்து பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஜோடியாக ஆலியா சஞ்சீவ் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆலியா விரைவில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here