கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

0
கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா -
கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. வெண்பாவை பாரதி திருமணம் செய்து கொள்ளமாட்டார் என தெரிந்து ஷர்மிளா வெண்பாவிற்கு வேறு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தலத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றுவது போல வீடியோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கதைக்களம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது. பல புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் ஷர்மிளா கதாபாத்திரம், வெண்பாவின் அம்மா என ஷர்மிளா கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது. வெண்பாவின் பிடிவாதத்திற்கு மேல் ஷர்மிளாவின் பிடிவாதம் இருக்கிறது. வெண்பாவிற்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என அவர் முடிவோடு தான் இருக்கிறார்.

வளைகாப்பு விழாவில் ஆலியா மனசா செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

இது பற்றி பாரதியிடம் ஒருமுறை பேச ஆனால் பாரதி மனதில் வெண்பா இல்லை என்பதை தெளிவாக தெரிந்துவிட்டது. அதனால் வெண்பாவிற்கு வேறு திருமணம் செய்ய வேண்டும் என நினைக்க ஆனால் வெண்பா பாரதியை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறார். வெண்பாவின் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என ஷர்மிளா பல வேலைகளை செய்கிறார். பாரதிக்கு விருது வழங்குவது கூட தெரியாமல் வெண்பா 12 மணி வரை துங்கா ஷர்மிளா அவர் மீது தண்ணீர் ஊற்றி விடுகிறார்.

இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

பாரதி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என தெரியாமல் இப்படி இருந்தால் எப்படி பாரதியை திருமணம் செய்வாய் அதனால் நான் சொல்லும் பையனை திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல வெண்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அம்மா பிடிவாதம் பிடித்தால் கண்டிப்பாக அதை செய்துவிடுவார் என்பதால் வெண்பா பயந்தாலும் கண்டிப்பாக பாரதியை தான் திருமணம் செய்வேன் என நினைக்கிறார். இந்நிலையில் ரேகா வெண்பா மீது தண்ணீரை கோபத்துடன் ஊற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!