“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா மற்றும் கஸ்தூரி இணைந்து செய்ய ரீல்ஸ் – ரசிகர்கள் பாராட்டு!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் மற்றும் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கம்பம் மீனா இணைந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRPயில் டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அண்ணன், தம்பிகள் 4 பேர் இருக்க தம்பிகளுக்காக மூத்த அண்ணன் மூர்த்தி வாழ அவருக்கு துணையாக அண்ணி தனம் இருக்கிறார். பின் மற்ற தம்பிகளுக்கு திருமணம் முடிய குடும்பத்தில் சந்தோசம் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் கடைசி தம்பி காதலில் விழ குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்.
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!
அதனால் குடும்பத்தில் விரிசல் விழ வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். மகன் பிரிவு தாங்காமல் இருக்கும் லட்சுமி அம்மா உடல்நிலை மோசமாகி இறக்க, கடைசியாக அம்மா முகத்தை பார்க்காமல் கண்ணன் இருக்கிறார். பின் தனம் அண்ணிக்கு ஆண் குழந்தை பிறக்க, குடும்பத்தில் மீண்டும் சந்தோசம் வருகிறது. ஆனால் கயல் பாப்பாவை அனைவரும் தூக்காமல் இருப்பதாக மீனா நினைக்க வீட்டில் சில வேலைகளை அவர் பார்க்கிறார். அதனால் கடுப்பாக இருக்க அந்த நேரம் பார்த்து மீனாவின் அப்பாவும் உசுப்பேத்துகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
இதனால் குடும்பத்தில் விரிசல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் மற்றும் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கம்பம் மீனா நினைத்து இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை செய்துள்ளனர். அதில் வடிவேலு காமெடி போல டயலாக் இருக்கிறது. ரீல்ஸில் கூட இருவரின் நடிப்பு நன்றாக இருப்பதாக அவர்களது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.