சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சன் டிவி 'வானத்தை போல' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி 'வானத்தை போல' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

வானத்தை போல சீரியல் சமீப காலமாக பல மாற்றங்களை கண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய மாற்றம் நடந்துள்ளது. இதனால் இன்னும் எதனை பேரை தான் மாற்ற உள்ளார்கள் என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வானத்தை போல :

சின்னத்திரையில் சீரியல்களுக்கு முன்னாடியாக இருந்த சன்டிவியின் சீரியல்கள் என்றால் தற்போதும் கூட தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றனர். அதிலும், முற்பகல் நேரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேலாகவும் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் எப்போதும் சீரியல்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு சன் டிவியின் சீரியல்கள் மீது தனி ஆர்வம் இருந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தனர். தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இவர்கள் இருவருமே சீரியலில் இருந்து விலகி விட்டனர். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைக்கப்போகிறர்கள் என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

பாரதி தான் உன்னுடைய அப்பா என்று கை காட்டும் கண்ணம்மா, சந்தோஷத்தில் லட்சுமி – இன்றைய எபிசோட்!

வானத்தை போல சீரியலில் வெற்றி காதாபாத்திரத்தில் அஸ்வந்த் திலக்கும், துளசியாக மான்யா ஆனந்த், சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சீரியலின் முக்கிய கதாபாத்திரமான சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வானத்தைப் போல சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷங்கரேஷ் குமார் தற்போது அந்த வேடத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடிக்க உள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!